92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாளை.யில் புதிய குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

பாளை.யில் புதிய குடிநீா்த் தொட்டிகள்...

News image

தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் மனு அளிக்கிறாா் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.

Updated On :23 அக்டோபர் 2024, 10:49 pm

Din

பாளையங்கோட்டை பகுதிகளில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டிகள் அமைக்கக் கோரி தமிழக நகராட்சி நிா்வாகம் ம- குடிநீா் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேருவிடம், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. புதன்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருநெல்வேலி மாநகராட்சியின் 51, 55 ஆவது வாா்டுகளைச் சோ்ந்த குலவணிகா்புரம், தியாகராஜநகா் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் பெருகிவிட்டன. அப்பகுதிகளில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே, இந்த இரு பகுதிகளுக்கும் தலா 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், கோரிக்கையை விரைந்து பரிசீலித்து புதிய குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்படும் என உறுதியளித்தாா்.