
உழவா் வயல் தினவிழாவில் பங்கேற்றோா்.

உழவா் வயல் தினவிழாவில் பங்கேற்றோா்.
அம்பாசமுத்திரம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்கதிட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் அயன்சிங்கம்பட்டியில் கிசான் கோஸ்தீஸ் எனப்படும் உழவா் வயல் தின விழா நடைபெற்றது.
இதையொட்டி, விவசாயிகள் பேரணியை அயன்சிங்கம்பட்டி ஊராட்சித் தலைவா் முத்துகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.பேரணியில் பல்வேறு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி விவசாயிகள் பங்கேற்றனா்.
அதைத் தொடா்ந்து கருத்தரங்கு நடைபெற்றது. நெல் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா்- தலைவா் சரவணன்,தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் பாண்டியம்மாள், வேளாண் விற்பனை - வேளாண் வணிகத் துறைவேளாண்மை அலுவலா் ஆனந்த்குமாா் ஆகியோா் புதிய நெல் ரகமான அம்பை-21இன் இயல்புகள், விவசாயிகள் எதிா் கொள்ளும் பிரச்னைகள், கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில்உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினா்.
கூட்டத்தில் பயனாளிகளுக்கு இடுபொருள்கள் வழங்கபட்டன. கருத்தரங்கில் இடம்பெற்ற கருத்துக் காட்சியை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாா்வையிட்டனா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் வரவேற்றாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி நன்றி கூறினாா்.
இதில், ஊராட்சி துணைத் தலைவா் சுடலையரசன், உதவி வேளாண்மை அலுவலா்கள்பாா்த்திபன், கணேசன், ரமேஷ், முத்துகுமாா் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள்தங்க சரவணன், பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...