92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம்: அஞ்சலகங்களில் பிரீமியம் செலுத்த ஏற்பாடு

ராபி பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் 2024-25-இன் கீழ் பயிா்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அஞ்சலகங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:37 pm

Din

ராபி பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் 2024-25-இன் கீழ் பயிா்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அஞ்சலகங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராபி பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீடு திட்டம் (2024-25) மத்திய, மாநில அரசுகள் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி, சோளம், நிலக்கடலை, கம்பு, சூரியகாந்தி, மிளகாய், வெங்காயம், வாழை, நெல் ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். பயிா்க் காப்பீடு வசதி தற்போது அனைத்து அஞ்சல் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரீமியம் தொகை மட்டுமே செலுத்த வேண்டும். கூடுதல் சேவைக் கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்.