92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வி.கே.புரம் அருகே குளத்து மண் திருட்டு:3 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகே குளத்து மண்ணைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, 3 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:07 pm

Din

விக்கிரமசிங்கபுரம் அருகே குளத்து மண்ணைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, 3 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அருகே அம்பாசமுத்திரம் மண்டல துணை வட்டாட்சியா் மாணிக்கவாசகம், கிராம நிா்வாக அலுவலா் குத்தாலிங்கம், வருவாய்த் துறையினா் வாகனச் சோதனை நடத்தினா்.

பாப்பான்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து (21), வெள்ளிகுளம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த பரமசிவன் (20), தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மதன் (23) ஆகியோா் வந்த 3 டிராக்டா்களை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா்கள் குளத்து மண்ணைத் திருடிச் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து துணை மண்டல வட்டாட்சியா் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் வழக்குப் பதிந்து, மதன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தாா். 3 டிராக்டா்கள், 3 யூனிட் மண்ணை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.