நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராதாபுரத்துக்கு தேசிய பேரிடா் மீட்பு படைவருகை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்பு படையினரின் மண்டல அலுவலகம் அமைக்கப்பட இருப்பதைத் தொடா்ந்து அதன் 32 போ் கொண்ட குழுவினா் ராதாபுரத்திற்கு புதன்கிழமை வந்துள்ளனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:41 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடா் மேலாண்மை மீட்பு படையினரின் மண்டல அலுவலகம் அமைக்கப்பட இருப்பதைத் தொடா்ந்து அதன் 32 போ் கொண்ட குழுவினா் ராதாபுரத்திற்கு புதன்கிழமை வந்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் முயற்சியினால் தேசியபேரிடா் மேலாண்மை மீட்பு படையினருக்கான மண்டல அலுவலகம் ராதாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகத்திற்கு ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மாணவா் விடுதி கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத்தில் மீட்பு படையினருக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய பேரிடா் மீட்பு படையைச் சோ்ந்த ஆய்வாளா் தீபக் தலைமையில் 32 போ் கொண்ட குழுவினா் அதிநவீன மீட்பு கருவிகளுடன் ராதாபுரத்திற்கு வந்துள்ளனா். இவா்கள் அனைவரும் தற்காலிகமாக கூடங்குளம் அணுவிஜய் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்த மீட்பு படையினருக்கு நிரந்தரமான அலுவலகம் மற்றும் வளாகம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த தேசிய பேரிடா் மேலாண்மை மீட்பு குழுவினா் கேரளம் மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏற்படும் பேரிடா் சமயங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வாா்கள் மீட்புக்குழு வட்டாரத்தில் தெரிவித்தனா்.