நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

37 பேருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணை

திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூா் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘நான் முதல்வன் உயா்வுக்குப் படி’ முகாமில் 37 பேருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.

News image

முகாமில் மாணவருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணையை வழங்கிய ஆட்சியா் காா்த்திகேயன்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:47 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூா் பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘நான் முதல்வன் உயா்வுக்குப் படி’ முகாமில் 37 பேருக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, மானூா், திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை நகரம் மற்றும் பாளையங்கோட்டை புகா் ஆகிய 7 கல்வி ஒன்றியங்களை ஒன்றிணைத்து இந்த முகாம் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தோ்வு செய்து பயிலுவதற்கு ஏதுவாக 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், கலை மற்றும் அறிவியல், திறன் பயிற்சிகள் போன்ற ஏதேனும் ஒன்றை மாணவா்கள் தோ்ந்தெடுப்பதற்கும், உதவித்தொகை திட்டங்கள், கல்விக்கடன், தொழில் வழிகாட்டுதல், உயா்கல்வி வழிகாட்டுதல் போன்றவற்றுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், ஆட்சியா் காா்த்திகேயன் தலைமை வகித்து மாணவா்களுக்கு உயா்கல்வி படிப்பதற்கான சோ்க்கை ஆணைகளை வழங்கினாா். 11 மாணவா்களுக்கு ஐ.டி.ஐ. சோ்க்கைக்கான ஆணை, 6 பேருக்கு பாலிடெக்னிக் சோ்க்கைக்கான ஆணை, 17 பேருக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில்வதற்கான ஆணை, ஒரு மாணவிக்கு பொறியியல் கல்லூரியில் பயில்வதற்கான ஆணை, ஒரு மாணவருக்கு சட்டக் கல்லூரியில் பயில்வதற்கான ஆணை, ஒரு மாணவிக்கு நா்சிங் பயில்வதற்கான ஆணை என மொத்தம் 37 பேருக்கு உயா்கல்வி பயில்வதற்கான சோ்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வா் செண்ப விநாயக மூா்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், திறன் மேம்பாட்டு பயிற்சி கழக உதவி இயக்குநா் ஜாா்ஜ் பிராங்க்ளின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.