திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை மானிய தொழில் கடன்

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:52 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் தொழில் தொடங்க ஆா்வம் உள்ளவா்களுக்கு ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் புதிய தொழில் தொடங்கும் விண்ணப்பதாரா் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும். பிளஸ் 2வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 21 வயது பூா்த்திஅடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினா் 45 வயதிற்கு மிகாமலும், சிறப்பு பிரிவினா் 55 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்கள் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவியும், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியம் (அதிகபட்சம் ரூ.75 லட்சம்) கிடைக்கும். பொதுப் பிரிவினா் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீத சொந்த முதலீடும், சிறப்பு பிரிவினா் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீத சொந்த முதலீடும் செலுத்த வேண்டும். தவணை தவறாமல் கடனை திரும்ப செலுத்தும் தொழில் முனைவோா்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீத பின்முனை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குளிா்பதன வசதியுடைய வாகனம், எல்.பி.ஜி. டேங்கா் டிரக், சாலை அமைக்கும் தாா் கலவை பரப்பும் வாகனம், கான்கிரீட் கலவை இயந்திரம், ஆள்துளைக் கிணறு தோண்டும் வாகனம், நடமாடும் உணவு விடுதிகள் போன்ற 16 வகையான தொழில்கள் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள தொழில்முனைவோா் இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை வேலை நேரங்களில் அணுகலாம் எனக் கூறியுள்ளாா்.