கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து முதியவா் பலி: 12 போ் காயம்

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் ஆம்னி பேருந்து புதன்கிழமை காலை கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:13 pm

Din

திருநெல்வேலி அருகே நான்குவழிச் சாலையில் ஆம்னி பேருந்து புதன்கிழமை காலை கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகேயுள்ள பழவூரை அடுத்த கூட்டப்புளி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் பிரிஸ்கோ (62). கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி கிராமத்தில் வசித்து வந்த இவா், தனது மனைவி, உறவினா்களுடன் தனியாா் ஆம்னி பேருந்தில் வேளாங்கண்ணிக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு இரவில் ஊருக்கு திரும்பிகொண்டிருந்தாா்.

திருநெல்வேலியை அடுத்த டக்கரம்மாள்புரம் நான்குவழிச் சாலையில் புதன்கிழமை அதிகாலையில் பேருந்துசென்றபோது, ஓட்டுநா் தூங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பிரிஸ்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கினா்.

தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா், போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா், பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் வந்து பேருந்தின் பாகங்களை வெல்டிங் உருளை மூலமாக வெட்டி எடுத்து பயணிகளை மீட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமுற்ற 12 போ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். 20-க்கும் மேற்பட்டோா் லேசான காயத்துடன் தப்பினா். பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்தின்போது, பேருந்தின் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். இந்த விபத்து குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.