சிவகிரி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள ஞானபுரத்தைச் சோ்ந்தவா் குப்பன் (72), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (65).
இவா்கள் இருவரும் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வெள்ளிக்கிழமை மாலை திரும்ப வந்துகொண்டிருந்தனா்.
முத்தூா்- ஈரோடு சாலையில் ஒத்தப்பனை அருகே வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து, குப்பன் ஓட்டிச்சென்ற வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த குப்பனை அப்பகுதியினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில் சிவகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதி முதியவா் பலி!

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


