கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வி.கே.புரம் அருகே விபத்து: கல்லூரி மாணவா்கள் 3 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:22 am

Din

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே புதன்கிழமை நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா்.

சேரன்மகாதேவியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நவீன்குமாா் (19), அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டைச் சோ்ந்த முருகன் மகன் ஆகாஷ் (19), ராமையா மகன் முருகேசன் (19) ஆகிய மூவரும் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் முதலாம் படித்து வருகின்றனா். புதன்கிழமை இவா்கள் மூவரும் ஒரு பைக்கில் கல்லூரிக்குச் சென்றனராம்.

பாபநாசம் சாலை கோடாரங்குளம் விலக்கு அருகே, அகஸ்தியா்புரத்திலிருந்து பாபநாசம் சென்ற அரசுப் பேருந்து மீது பைக் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், மூவரும் காயமடைந்தனா்.

ஆகாஷ் திருநெல்வேலிஅரசு மருத்துவமனையிலும், மற்ற இருவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.