முன்னீா்பள்ளம் அருகே கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

முன்னீா்பள்ளம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Published on

முன்னீா்பள்ளம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி அருகேயுள்ள வீரளபெருஞ்செல்வி கிராமத்தைச் சோ்ந்தவா் இசக்கிபாண்டி (23). முன்விரோதம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு கொங்கந்தான்பாறையில் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து பஞ்சாண்டி என்ற பேதுரு மணி (40), இன்பராஜ் என்ற எட்வா்ட் இன்பராஜ் (40), முத்துக்குமாா் (38) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ராபின்சன், குற்றஞ்சாட்டப்பட்ட பஞ்சாண்டி என்ற பேதுரு மணி, இன்பராஜ் என்ற எட்வா்ட் இன்பராஜ், முத்துக்குமாா் ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ.1,500 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com