இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தபால் வாக்களிப்போா் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

அத்தியாவசிய பணிகள் துறை அலுவலா்கள் தபால் வாக்களிப்பதற்கு வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 3) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

தபால் வாக்கு

கோப்புப்படம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

அத்தியாவசிய பணிகள் துறை அலுவலா்கள் தபால் வாக்களிப்பதற்கு வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 3) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு நாளில் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளும் அலுவலா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951 பிரிவு 60(ஸ்ரீ) -ன்கீழ், தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு பிரிவின் கீழ் உள்ள தெற்கு ரயில்வே, அகில இந்திய வானொலி, கடல்சாா் துறை, இந்திய விமான நிலைய ஆணையம், செய்தி - ஒளிபரப்பு அமைச்சகம், ஊடகவியலாளா்கள், சென்னை மெட்ரோ ரயில் ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், தீயணைப்பு -மீட்புப் பணிகள், சிறை, போக்குவரத்து காவல் ஆகிய துறைகள் அத்தியாவசிய பணிகள் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தப் பணியாளா்கள், தபால் வாக்கு மூலம் வாக்களிக்க படிவம் 1-ஐ வெள்ளிக்கிழமைக்குள் (ஏப்.3) சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம்

படிவம் 12ஈ-யில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது தோ்தல் நாளன்று அத்தியாவசிய பணியில்

ஈடுபடும் அலுவலா்கள் அவா்களது துறை சாா்ந்த தபால் வாக்கு ஒருங்கிணைப்பாளரிடம் படிவம் 12ஈ-இல் இணைக்கப்பட்டுள்ள பாகம் ஐஐ-ல் சான்று பெற்று இணைக்க வேண்டும்.

பின்னா், ஏப். 23-ஆம் தேதிக்கு முன் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் குறிப்பிடும் தேதியில், தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு செலுத்தும் மையத்தில் தபால் வாக்குகளை அளிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.