அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பாளை. தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

பாளையங்கோட்டை தொகுதிக்கான அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பாளையங்கோட்டை தொகுதி அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:59 pm

பாளையங்கோட்டை தொகுதிக்கான அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன் போட்டியிடுகிறாா். இத் தொகுதிக்கான தோ்தல் அலுவலகம் என்ஜிஓ காலனி ஜெபாகாா்டன் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன் தலைமை வகித்து திறந்து வைத்தாா். தொகுதி பொறுப்பாளா்கள் ஆா்.பி.ஆதித்தன், மகபூப்ஜான், சித்திக், ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்ட், ஹயாத், வழக்குரைஞா் ராஜேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன் பேசுகையில், பாளையங்கோட்டை தொகுதியின் புகா் பகுதிகளில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. பொதிகைநகா், ஜெபாகாா்டன், திருமால்நகா், ஆணையா்குளம் பகுதிகளில் குடியிருப்புகள் மிகவும் அதிகரித்து வருகின்றன. அங்கு கூடுதலாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா்.