எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

அதிமுக வென்றதும் பயிா்க்கடன் தள்ளுபடி: தச்சை என்.கணேசராஜா

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றதும் விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

News image

சொக்கட்டான்தோப்பு பகுதியில் வாக்குசேகரித்தாா் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:49 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வென்றதும் விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா.

தென்பத்து, சொக்கட்டான்தோப்பு, பாட்டப்பத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகளை புதன்கிழமை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்து அவா் பேசியதாவது:

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளாா். வேளாண் பயிா்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வாடகையில் ட்ரோன் வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி, மானியம் போன்ற சலுகைகள்அளிக்க்கப்படும். புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் 100 சதவீத மானியத்தில் ‘சூரிய ஒளி பம்ப் செட்டுகள்’ வழங்கப்படும்.

விவசாயப் பணியின்போது இடி, மின்னல் தாக்கியோ, பாம்பு கடித்தோ, வனவிலங்குகளால் தாக்கப்பட்டோ உயிரிழந்தால், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். நெல் ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயா்த்தப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு உரம், விதைகள் போன்ற இடுபொருள்கள் வாங்க, உற்பத்தி மானியம் ஹெக்டேருக்கு ரூ. 15,000 வரை ஆண்டுதோறும் வழங்கப்படும். கூட்டுறவு சங்கம் மூலம் வேளாண் பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக அளித்துள்ள வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றாா்அவா்.

அதிமுக மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.