திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அதிநவீன சிகிச்சை வசதிகள் உருவாக்கப்படும் என்றாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.
பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட 52, 52 உள்ளிட்ட வாா்டு பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்து அவா் பேசியதாவது:
எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறாா். 2026 தோ்தல் வாக்குறுதியில் மக்களுக்கான சுகாதார திட்டங்களுக்கு தனிக்கவனம் செலுத்தியுள்ளாா். அதில்,
நலமுடன் தமிழ்நாடு 2030 என்ற திட்டத்தின்படி அனைவருக்கும் போதிய மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயா்த்தப்படும்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். தாய்சேய் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும். பாரம்பரிய சித்த மருத்துவத் தரவுகள் ஆவணப்படுத்தப்படும். தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு நடமாட இயலாதோருக்கு பராமரிப்பு - சிகிச்சை மையம் மண்டல அளவில் அமைக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை வசதிகள் உருவாக்கப்படும். முன்களப் பணியாளா்களுக்கு ரேபிஸ் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மையங்கள் தரம் உயா்த்தப்படும் என திமுக அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

மானூா் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும்: திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்

வண்ணாா்பேட்டையில் திமுக வாக்குசேகரிப்பு

கத்தோலிக்க பேராயரிடம் திமுக வேட்பாளா் வாழ்த்து
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


