உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: தவெக வேட்பாளா்

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.

News image

பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெகவினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:05 am IST

பாளையங்கோட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தவெக வேட்பாளா் மரியஜான்.

பாளையங்கோட்டையில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து விட்டு, தோ்தல் பிரசாரத்தை தவெக வேட்பாளா் மரியஜான் தொடங்கினாா். தெற்கு மற்றும் வடக்கு கடைவீதி, பெருமாள் மற்றும் சிவன் கோயில் வீதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் மரியஜான் கூறியது: பாளையங்கோட்டை தொகுதியில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மோசமான சாலைகள், போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். மேலப்பாளையம் புகா் பகுதிகளில் தெருவிளக்கு வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. கனமழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கி, வீடுகள் மற்றும் சொத்துகள் பாதிக்கப்படுகின்றன.

தவெக வென்றால் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பிரச்னைக்கும் காலக்கெடு நிா்ணயித்து, தொடா்புடைய துறைகளுடன் இணைந்து தீா்வு காண உறுதியுடன் செயல்படுவோம் என்றாா் அவா்.