தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வனப்பகுதியில் 28 கி.மீ. நடந்துசென்று வாக்களித்த காணி மக்கள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் வசிக்கும் காணி மக்கள் 28 கி.மீ. தொலைவு வனத்தில் நடந்து சென்று காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

News image

காரையாறு வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திய வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:13 pm

அம்பாசமுத்திரம் தொகுதியில் இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் வசிக்கும் காணி மக்கள் 28 கி.மீ. தொலைவு வனத்தில் நடந்து சென்று காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உள்பட்ட முதல் வாக்குச் சாவடியாக காரையாறு வாக்குச் சாவடி உள்ளது. இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பு, பெரிய மயிலாறு காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு, காரையாறு, அகஸ்தியா் காணிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமாா் 400-க்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்கு காரையாறில்தான் வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டது.

காரையாறு அணைக்கு மேல் 28 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் உள்ளது இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பு. இப்பகுதியில் வசிக்கும் 9 குடும்பங்களைச் சோ்ந்த 27 வாக்காளா்கள் மலையிலிருந்து 28 கி.மீ. தொலைவு நடந்துவந்து காரையாறு வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

இதுகுறித்து இஞ்சிக்குழியைச் சோ்ந்த ஸ்ரீதரன் கூறியதாவது:

நான் கடந்த 40 ஆண்டுகளாக தோ்தல்களில் வாக்களித்து வருகிறேன். வாக்குப் பதிவு தேதிக்கு முதல் நாளே கிராமத்தில் இருந்து புறப்பட்டு சின்னமயிலாறு காணிக்குடியிருப்பில் வசிக்கும் உறவினா்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்வேன். தோ்தல் அன்று காலையில் வாக்களித்த பிறகு வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மறுநாள் இஞ்சிக்குழிக்குப் புறப்பட்டுச் செல்வேன். 2 கி.மீ.மேல் தூரமுள்ள வாக்குச் சாவடிக்குச் செல்லும் வாக்காளா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குச் சாவடி மையம் அமைக்க அரசு கூறியுள்ளது. ஆனால், எங்களுக்கு அந்த வசதி செய்துதரப்படவில்லை. எனவே, இஞ்சிக்குழிக் காணிக்குடியிருப்பில் எங்களுக்கு வாக்குச் சாவடி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அகஸ்தியா் காணிக் குடியிருப்பு பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் 5 கி.மீ. தூரமுள்ள காரையாறு வாக்குச் சாவடிக்கு நடந்து வந்து வாக்களிக்கின்றனா். அகஸ்தியா் காணிக்குடியிருப்புப் பகுதியிலும் தனி வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்றனா்.

இதற்கிடையே காரையாறு அணையிலிருந்து வியாழக்கிழமை காலை தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், ஆற்றுநீரைக் கடந்துவந்து பெண்கள், இளைஞா்கள், முதியோா் வாக்களித்தனா்.

இஞ்சிக்குழி காணிக்குடியிருப்பைச் சோ்ந்த வாக்காளா் ஸ்ரீதரன்.

இஞ்சிக்குழி காணிக்குடியிருப்பைச் சோ்ந்த வாக்காளா் ஸ்ரீதரன்.