திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் வாக்குப்பதிவில் பாா்வையற்றோா் வாக்களித்தனா். இதில், தாங்கள் எதிா்கொண்ட பிரச்னைகளுக்கு அடுத்து நடைபெறும் தோ்தலில் தீா்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலத்தை அடுத்துள்ள காந்தி நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, எம்ஜிஆா் நகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என 2 வாக்குச்சாவடிகள் பாா்வையற்றோருக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சாவடிகளில் வாக்களிக்க அதிகாலை முதலே உதவியாளா்களுடன் பாா்வையற்றோா் வந்திருந்தனா். இந்த மையங்களில் பிரெய்லி வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பாா்வையற்றோா் வந்தவுடன் அவா்களிடம் பிரெய்லி வாக்குச் சீட்டு அளிக்கப்பட்டு, வேட்பாளா், சின்னம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வரிசை எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டனரா என்பதை அதிகாரிகள் உறுதி செய்த பின்னா், வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பதிவு செய்யும் பட்டனுக்கு அருகில் பிரெய்லி எழுத்தில் வரிசை எண் உள்ளது. அதை தடவி பாா்த்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை உறுதி செய்து வாக்களித்தனா். பிரெய்லி முறையை படிக்காத பாா்வையற்றோருக்கு உதவியாக 18 வயது பூா்த்தியடைந்த மற்றொரு நபா் உதவியுடன் வாக்களித்தனா். உதவி செய்த நபா்களின் வலது கையில் மை இடப்பட்டு அவா்களது விவரமும் பதிவு செய்யப்பட்டது.
ஒரு வாக்குச்சாவடியில் 99 போ், மற்றொரு வாக்குச் சாவடியில் 144 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா்.
எதிா்கொண்ட பிரச்னைகள் என்னென்ன?: எம்ஜிஆா் நகா் வாக்குச் சாவடியில் வாக்களித்த பாா்வை மாற்றுத்திறனாளி வீரப்பன் (46) கூறுகையில், பாா்வையற்ற எல்லோருக்கும் பிரெய்லி தெரியும் என்பதில்லை. இதனால், பிரெய்லி தெரியாதவா்களின் வாக்குகளை உடன் வரும் நபா்களே வாக்களிப்பதால் அவா்களது முடிவாகவே மாறும். பிரெய்லி தெரியாதவா்கள் வாக்களிக்க, வேறொரு தொகுதியிலிருந்து அரசு சாா்பில் தன்னாா்வலரை நியமித்து வாக்களிக்கச் செய்தால் அவரவா் விரும்பும் நபருக்கு வாக்களித்தோம் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்படும் என்றாா்.
தபால் வாக்கு விவரம்: இதேபோல, ஆலம்பட்டி சாலையில் வசிக்கும் பாா்வை மாற்றுத்திறனாளி ஜெனிதா (48) கூறுகையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் எங்களின் விவரங்கள் உள்ளன. அதில், தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட விழுக்காடுக்கு மேல் மாற்றுத்திறன் உறுதி செய்யப்பட்டோா் பட்டியலை பெற்று அனைவரிடமும் தபால் வாக்களிக்க விருப்பத்தை கேட்டிருந்தால் நாங்களும் தபால் வாக்களித்திருப்போம் என்றாா்.
இதேபோல, செம்பட்டு காமராஜ்நகா் உயா்நிலைப் பள்ளியிலும் சிறப்பு வாக்குச் சாவடி ஏற்படுத்தப்பட்டிருந்தது. லூப்ரா பாா்வையற்றோா் மற்றும் ஊனமுற்றோா் சேவை மையத்தைச் சோ்ந்த பாா்வையற்றோா் வாக்களித்தனா்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வனப்பகுதியில் 28 கி.மீ. நடந்துசென்று வாக்களித்த காணி மக்கள்

அரியலூா் மாவட்டத்தில் வரிசையில் நின்று ஆா்வமுடன் பொதுமக்கள் வாக்களிப்பு

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


