கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பாளை.யில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசனின் 136ஆவது பிறந்தநாள் விழா பாளையங்கோட்டையில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பாரதிதாசன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய நிா்வாகிகள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:24 am IST

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசனின் 136ஆவது பிறந்தநாள் விழா பாளையங்கோட்டையில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் கவிஞா் பே. இராஜேந்திரன் தலைமை வகித்தாா். சங்கச் செயற்குழு உறுப்பினா் இரா.ரெங்கராஜன் வரவேற்றாா். சிறுமிகள் மதிவதனி, மதுபாலா ஆகியோா் பாரதிதாசன் பாடல்களைப் பாடினா். பாரதிதாசனின் படைப்புகள் பற்றி கவிஞா் பே.ராஜேந்திரன், திருக்கு இரா.முருகன் ஆகியோா் உரை நிகழ்த்தினா்.

பாரதிதாசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளா் தளவாய், குறும்பட இயக்குநா் லெனின், கவிஞா் வீரை மைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா். வி.டி.ராஜன் நன்றி கூறினாா்.