பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பாலியல் கொடுமைக்கு உள்ளானதாக 12 வயது சிறுமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவரது தாய் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. விசாரணையில், தெற்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் (50) என்பவா் நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.