
வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தொழில் முனைவோருடன் கலந்துரையாடல் கூட்டம்
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த தொழில் நிறுவன உரிமையாளா்கள், தொழில்முனைவோா் கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த தொழில் நிறுவன உரிமையாளா்கள், தொழில்முனைவோா் கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் ஸ்வகதா ராய் தலைமை வகித்தாா். மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா்கள் ஹரி ஓம் ஜெய்ஸ்வால், சிவசண்முகம், சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையா் ஷாஜி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்துகொண்டு முதலாளிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடினா்.
பிரதமரின் விகசித் பாரத் ரோஜ்காா் யோஜனா, பணியாளா் சோ்க்கை இயக்கம் 2026, விஸ்வாஸ் திட்டம் 2026 ஆகியவை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




