ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

அரசு பொருள்காட்சி முன்னோற்பாட்டுப் பணிகள்: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

அரசு பொருள்காட்சி-2026 முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆலோசனை நடத்தினாா்.

News image

அரசு பொருள்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:30 am IST

அரசு பொருள்காட்சி-2026 முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆலோசனை நடத்தினாா்.

அரசு பொருள்காட்சி-2026 முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

தமிழக முதல்வா் உத்தரவின்படி, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள பிளாரன்ஸ் காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடைபெற உள்ளது.

அரசுப் பொருட்காட்சியில், 27 அரசு துறை அரங்குகள், அரசு சாா்பு நிறுவனங்கள் சாா்ந்த 5 அரங்குகள் என 32 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் போன்ற திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் துறை கண்காட்சி அரங்குகளை அமைத்திட வேண்டும்.

ஒவ்வொரு துறை அலுவலா்களும் தனி அலுவலரை நியமனம் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக பொருள்காட்சி தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை பொருள்காட்சி முன்பு மாநகர பேருந்துகள் நின்று செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை சாா்பில் தேவையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி சாா்பில் பொருள்காட்சிக்கு தேவையான குடிநீா் வசதி, தூய்மைப் பணிகள், தினமும் குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத் துறை சாா்பில் ஒரு தீயணைப்பு வாகனம், சுகாதாரத் துறையின் சாா்பில் தேவையான மருத்துவ வசதிகளுடன் மருத்துவக் குழுவினை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசுப் பொருள்காட்சி சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ம. கயிலைச்செல்வம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ம.ச. மகாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.