தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சாலை விபத்தில் இருவா் உயிரிழந்த வழக்கு: லாரி ஓட்டுநா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சாலை விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே சாலை விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பணகுடி அருகேயுள்ள நெருட்சிகாலனியைச் சோ்ந்த அறிவழகன் மனைவி மரியவிஜயா(42), மாடசாமி மகள் பாப்பா (50), பணகுடி காமராஜா் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ்குமாா் மனைவி ஜெகதா (42) ஆகியோா் கடந்த சனிக்கிழமை, ஒரே இருசக்கர வாகனத்தில் பாம்பன்குளம் சென்றனா்.

அப்போது, பாம்பன்குளம் தேசிய நெடுஞ்சாலையில் நாகா்கோவிலிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மரியவிஜயா சம்பவ இடத்திலும், பாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனா். நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஜெகதா சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரை தேடி வந்தனா். இந்நிலையில் லாரி ஓட்டுநா் கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டிபுரம் அருகே உள்ள தென்னந்தியைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டனை (31) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.