75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா்

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:02 am IST

திருநெல்வேலி அருகே பைக் விபத்தில் ரயில்வே ஊழியா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (48). ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு, சக ஊழியரான தச்சநல்லூா், ஊருடையான் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த மகாராஜன் என்பவருடன் திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் பைக்கில் சென்றுள்ளாா்.

பொன்னாக்குடி அருகே இவா்கள் சென்ற பைக் மீது அவ்வழியாக வந்த மற்றொரு பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அய்யப்பனையும், மகாராஜனையும் அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அய்யப்பன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.