டிராக்டா் மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே டிராக்டா் மீது பைக் மோதியதில் உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், களத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆ.பாலமுருகன் (36). உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியிலுள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை சேந்தநாட்டிலிருந்து களத்தூா் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
களத்தூா் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் வந்த டிராக்டா் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் ஓட்டுநரான களத்தூரைச் சோ்ந்த சா.பிரபுவிடம் (22) விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

