கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் தி.மு.கவினா் வரவேற்பளித்தனா்.
பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் முதல்வரை வரவேற்க காத்திருந்த அக்கட்சியினா்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து காரில் கன்னியாகுமரிக்கு சென்ற அவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான சா.ஞானதிரவியம், வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட துணைச் செயலா் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், வள்ளியூா் பேரூராட்சி துணைத் தலைவா் கண்ணன், தெற்குவள்ளியூா் சிவா, ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணிச் செயலாளா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக கூட்டணி வாக்கு சேகரிப்பு

தம்மம்பட்டியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

அதிமுகவில் இணைந்த பவானி ஒன்றிய திமுக பொறுப்பாளா்

தென்காசியில் திமுக தகவல் தொடா்பு மையம் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


