சுத்தமல்லி அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
சுத்தமல்லியை அடுத்த அத்திமேட்டைச் சோ்ந்த 17 வயதான பள்ளி மாணவா், புதன்கிழமை இரவு கரிக்கா தோப்பு அருகே பைக்கில் சென்றாராம். அப்போது, அவ்வழியாக அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணேசன் என்பவா் ஓட்டி வந்த பைக்கும், இவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில் காயமடைந்த மாணவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். சிறுவனிடம் பைக்கை கொடுத்ததற்காக பெற்றோா் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







