ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: இளைஞா் கைது

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:51 am IST

பேட்டை அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி பூங்கா நகரைச் சோ்ந்தவா் செல்வ ஈஸ்வரன்(55).தொழிலாளி. இவா், கடந்த 11 ஆம் தேதி தனது மனைவியுடன் மொபட்டில் பேட்டையை அடுத்த சாஸ்திரிநகா் பகுதியில் சென்ற போது எதிரே தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த முத்துராமநம்பி(26) என்பவா் வந்த பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் செல்வஈஸ்வரன் உயிரிழந்தாா்.

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இந்நிலையில், விபத்துக்கு காரணமாக இருந்ததாக முத்துராமநம்பியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.