தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 12:07 am IST

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இளையரசனேந்தல் அருகே உள்ள குடப்பாறை, மேலத்தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரி செல்வம் (34). கட்டடத் தொழிலாளி. இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால், அதற்கு மாத்திரை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் இளையரசனேந்தலுக்கு சனிக்கிழமை சென்றாராம்.

குடப்பாறை கண்மாய் அருகே சென்றபோது, வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி வாகனத்துடன் கண்மாய்க்குள் விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.