உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம் | முதல்வர் விஜய் பிறந்தநாள்

முதல்வரின் பிறந்தநாளையொட்டி, ஜூன் 21, 22 இரு தேதிகளில் 3 உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் இல்லை என அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவிப்பு

CM Vijay

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :

முதல்வரின் பிறந்தநாளையொட்டி, ஜூன் 21, 22 இரு தேதிகளில் 3 உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணம் இல்லை என அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியதாவது, "முதல்வர் ச. ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டலூர், வேலூர் அமிர்தி, சேலம் குரும்பட்டி ஆகிய உயிரியல் பூங்காக்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் நுழைவுக் கட்டணம் இல்லாமல், வழக்கமான முறையில் இணைய வழியாக நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, ஜூன் 21, 22 ஆகிய இரு தேதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணத்தை தவெக சார்பாக வனத்துறை அமைச்சரான நானும் எனது சகோதர்களும் குடும்ப அறக்கட்டளையும் அரசுக்கு முழுமையாகச் செலுத்தி விடுவோம்.

இந்த இரு நாள்களுக்கான நுழைவுக் கட்டணச் செலவு கிட்டத்தட்ட ரூ. 70 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.

Summary

CM Vijay's Birthday: Free entry to Vandalur Zoo on June 21 and 22

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.