காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு!

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளது குறித்து...

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - டிஐபிஆர்

Updated On :27 ஜூலை 2026, 10:05 pm IST

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூலை 27) உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பட்டாசு ஆலைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (ஜூலை 26) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் (வயது 32), த/பெ. ரவீந்திரன், ராமச்சந்திரன் (வயது 40), த/பெ. ரவீந்திரன், இன்னாசிமுத்து (வயது 44), த/பெ. சிங்கராஜ் மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த திரு. பாண்டித்துரை (வயது 35), த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்து, அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இத்துடன், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Summary

Chief Minister vijay orders inspection of Sivakasi firecracker factories!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.