FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!
/

முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!

முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம் என்று டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது பற்றி...

News image

தமிழக முதல்வர் விஜய் | கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார். - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 2:42 pm IST

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தற்போதைய சூழலில் கர்நாடகத்துக்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்த நிலையில், தில்லியில் நேற்று கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் அவசர ஆலோசனையில் இன்று ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் விஜய்யின் வருகை குறித்து அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இன்னும் அவரது பயணம் உறுதியாகவில்லை. அவருடன் தொலைபேசியில் பேசியபோது, இரு மாநிலங்களில் நலன் சார்ந்த விஷயங்களை ஆலோசித்தோம்.

தற்போது கர்நாடகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வருகை தருவது சரியாக இருக்காது. அவர் வருகை தரும் போது கர்நாடகத்தில் போராட்டம் நடந்தால் எப்படி சமாளிப்பது. எங்களின் விருந்தினராக வரும்போது அவருக்கு பிரச்னை இருக்கக் கூடாது.

இரு மாநிலங்களும் பலன் பெறும் உரிய சூழல் வரும்போது இருவரும் நேரில் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்காக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற ஆகஸ்ட் 3, திங்கள்கிழமை அன்று பெங்களூருவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Chief Minister Vijay should not come to Karnataka! D.K. Shivakumar's request!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.