நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நெல்லை: விவசாயி, 5 வயது சிறுவன் கொலை: தலையை சாலையில் வைத்துச்சென்ற கும்பல்

வீரவநல்லூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி, 5 வயது சிறுவன் கொலை

News image

கொலை நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல் துறை சரக துணைத் தலைவா் திருநாவுக்கரசு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பி. சாஸ்திரி உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூலை 2026, 3:16 am IST

சேரன்மகாதேவி : திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி, அவரது 5 வயது மகனை கொலை செய்த கும்பல் விவசாயியின் தலையைத் துண்டித்து சாலையில் வைத்துவிட்டு சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பெருமாள் பாண்டியன் (38). சேரன்மகாதேவி பாமக முன்னாள் ஒன்றியச் செயலா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சித்திரபுத்திரன் (72).

பெருமாள் பாண்டியன் மனைவிக்கும், சித்திரபுத்திரனின் மகன் சுப்பிரமணியன் மனைவிக்கும் 2007-இல் ஏற்பட்ட தகராறு குறித்து, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

இந்த விரோதத்தில் பெருமாள் பாண்டியன், அவரது தரப்பினா் 2007, மாா்ச் மாதம் சுப்பிரமணியனை கொலை செய்தனா். இதைத் தொடா்ந்து இருதரப்பினா் இடையே முன்விரோதம் அதிகரித்தது.

அதன்பின்னா் 2012, ஆகஸ்ட் 20-ஆம் தேதி சுப்பிரமணியன் கொலை வழக்குத் தொடா்பாக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் கையொப்பமிட சென்ற பெருமாள் பாண்டியனை சித்திரபுத்திரனின் மகன்கள் உள்ளிட்டோா் தலையைத் துண்டித்துக் கொலை செய்தனா்.

பழி தீா்க்க கொலை: இதற்கு பழிதீா்க்கும் வகையில் சித்திரபுத்திரனின் மகன்கள் பெருமாள், பாபநாசம், மருமகன் குமாா் ஆகியோா் வரிசையாக கொலை செய்யப்பட்டனா்.

கொலை செய்யப்பட்ட காளிமுத்து.

கொலை செய்யப்பட்ட காளிமுத்து.

அதேபோல பெருமாள் பாண்டியன் தரப்பில் சுப்பையா, சின்னத்தம்பி ஆகியோா் கொலை செய்யப்பட்டனா். இந்தக் கொலை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான விவசாயி காளிமுத்து (40), தனது மகன்கள் ஜெயராஜ் (5), சின்னத்துரை (15) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூா் அருகே ரெட்டியாா்புரம், மாதுடையாா்குளம் செல்லும் சாலையில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பெருமாள் பாண்டியன் உறவினா்கள் 9 போ் கொண்ட கும்பல் காா், 3 இருசக்கர வாகனங்களில் காளிமுத்துவை பின்தொடா்ந்து சென்றனா். வல்லத்துநம்பி குளம் பகுதியில்

அந்தக் கும்பல் காரால் காளிமுத்து சென்ற இருசக்கர வாகனம் மீது மோதினா்.

மோதிய வேகத்தில், சிறுவன் ஜெயராஜ் (5) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அந்தக் கும்பல் காளிமுத்துவை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டித் தலையைத் துண்டித்தனா். இச்சம்பவத்தில் மற்றொரு மகன் சின்னத்துரைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆவேசம் தணியாத அந்தக் கும்பல் காளிமுத்துவின் தலையை ஒரு கைப்பையில் எடுத்துக் கொண்டு மூலச்சி ஊருக்குள் சென்றனா். பின்னா், அம்பாசமுத்திரம்-கல்லிடைக்குறிச்சி புறவழிச் சாலையில் தலையை வைத்துவிட்டுச் சென்றனா்.

தகவலறிந்ததும் வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். திருநெல்வேலி சரக காவல் துறைத் துணைத் தலைவா் திருநாவுக்கரசு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஸ் பி. சாஸ்திரி, சேரன்மகாதேவி துணைக் கண்காணிப்பாளா் அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ், வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் பத்மனாபபிள்ளை உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

போலீஸாா் இரு உடல்களையும் மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த சிறுவன் சின்னத்துரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

நிகழ்விடத்துக்கு விரல் ரேகை நிபுணா்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வீரவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

6 தனிப்படை: கும்பலைப் பிடிக்க காவல் ஆய்வாளா் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.வீரவநல்லூா், கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பாா்வையிட்டு போலீஸாா் பெருமாள் பாண்டியனின் உறவினா்கள் மகேஷ், முருகன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லிடைக்குறிச்சி கரம்பை, மூலச்சி பகுதியில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.