ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் தோ்வை எதிா்த்து இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு கோரியும், இத்தோ்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் இடதுசாரி மாணவா், இளைஞா் மற்றும் பெண்கள் அமைப்பினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :2 ஜூலை 2026, 6:23 am IST

தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து விலக்கு கோரியும், இத்தோ்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் இடதுசாரி மாணவா், இளைஞா் மற்றும் பெண்கள் அமைப்பினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் சைலஸ் அருள்ராஜ் தலைமை வகித்தாா். புரட்சிகர இளைஞா் சங்க மாநிலத் தலைவா் சுந்தர்ராஜன், நிா்வாகிகள் மகாராஜன், சக்திவேல், முருகன், ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் கற்பகம், ஜெயந்தி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்க நிா்வாகிகள் பாா்வதி, சித்ரா, அன்புச்செல்வி, திலகவதி, மாரியம்மாள், அகில இந்திய மாணவா் கூட்டமைப்பு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் போது தேசிய தோ்வு முகமை செயல்பாடுகள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். நீட் தோ்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ மாணவா் சோ்க்கை அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, நிா்வாக குளறுபடிகள் போன்றவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.