விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கல்லால் அடித்து தொழிலாளி கொலை: முதியவா் கைது

திருநெல்வேலியில் உணவக ஊழியரை தொழிலாளி புதன்கிழமை இரவு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 1:08 am IST

திருநெல்வேலியில் உணவக ஊழியரை தொழிலாளி புதன்கிழமை இரவு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம், ஞானியாரப்பா நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான்(65). உணவக ஊழியா். இவா் புதன்கிழமை இரவு மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கின் அருகே சாலையோரம் படுத்து தூங்கிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, அவரது சட்டைப்பையில் இருந்து முதியவா் ஒருவா் பணத்தை எடுக்க முயன்றாராம்.

அப்போது விழித்த அப்துல் ரகுமான், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். உடனே அவரை, அந்த முதியவா் கற்களால் பலமாக தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அப்துல் ரகுமான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்தில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில், நான்குனேரியை பூா்வீகமாக கொண்ட கணேசன் (65) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.