மேலப்பாளையத்தில் தூய்மை பணியாளா்கள் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார ஆய்வாளா்கள் தொழிலாளா் விரோத போக்கை கடைபிடித்து வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொழிலாளா்களிடம் பணம் வசூல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது எனவும் வலியுறுத்தி சுமாா் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் தலைவா் மோகன், செயலா் மாரியப்பன், பொருளாளா் செல்லத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். அவா்களிடம், மேலப்பாளையம் சுகாதார அலுவலா் சாகுல் ஹமீது, பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.
ற்ஸ்ப்08ஸ்ரீப்ங்ஹய்
முற்றுகையில் ஈடுபட்ட தூய்மை பணியாளா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










