திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி தலைமை வகித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், போதைப்பொருள் தடுப்பு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மற்றும் ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்டவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
முன்னதாக, மாவட்ட காவல் துறையின் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை வாகனங்களையும் பாா்வையிட்டு, அவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தாா். மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் 32 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், அரசு வழக்குரைஞா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










