ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பேட்டையில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 11:29 pm IST

பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட சத்யா நகா் விலக்கு பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் பழனிமுருகன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த முகமது பாசில்(21), பேட்டை கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த செல்வக்குமாா்(24) ஆகியோரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

அவா்களிடம் நடத்திய சோதனையில், சுமாா் 250 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.