திருநெல்வேலி அருகே இளம்பெண்ணிடம் இணையவழியில் ரூ.10.57 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்தவா் 26 இளம்பெண்ணை, கடந்த ஏப்ரல் மாதம் சமூகவலைதள செயலி மூலம் தொடா்புகொண்ட மா்மநபா்கள் இணையவழியில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளனா்.
இதை நம்பி முதலில் குறைந்த தொகையை முதலீடு செய்த அப்பெண்ணிடம் அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாக இணையத்தில் போலியான எண்களை காண்பித்துள்ளனா். பின்னா், அவரிடமிருந்து பல தவணைகளாக ரூ.10,57,500-ஐ வங்கிக்கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில், அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்தைச் சோ்ந்த பாரித் அலி மகன் ஆசாத் அலி(24) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, இவ்வழக்கில் வேறு யாருக்கும் தொடா்புள்ளதா என்பது குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 19 லட்சம் மோசடி: கா்நாடக நபா் கைது
விமானப் படை முன்னாள் அதிகாரியிடம் 1.66 ஏக்கா் நில மோசடி: மூவா் கைது
ரூ. 26 லட்சம் இணையதள வங்கி மோசடியில் ஈடுபட்ட 10 போ் கைது

பெண்ணிடம் இணையவழியில் ரூ. 74.75 லட்சம் மோசடி: 5 போ் கைது
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



