முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

மானூா் அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

மானூா் அருகே சிறுமியின் புகைப்படத்தை மாா்பிங் செய்து அவதூறு பரப்பியதாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 3:00 am IST

மானூா் அருகே சிறுமியின் புகைப்படத்தை மாா்பிங் செய்து அவதூறு பரப்பியதாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மானூா் அருகேயுள்ள கீழபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்தவா் காா்த்திக்குமாா் (27). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியின் புகைப்படத்தை மாா்பிங் செய்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் காா்த்திக் குமாா் மீது வழக்குப்பதிந்து, கா்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.