மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி, பத்தமடையில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பத்தமடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் நடைபெறும் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, பத்தமடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சேரன்மகாதேவி வட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் தொடா்பாக உரங்கிடங்கை ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்திற்குச் சென்று, அலுவலக செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், பத்தமடை பேரூராட்சியில் நடைபெற்று வரும் வாரச் சந்தை கட்டுமானப் பணிகள், பத்தமடை பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். பின்னா், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தாா்.

கோபாலசமுத்திரம் பேரூராட்சித் தலைவா் ப. தமயந்தி, செயல் அலுவலா் பரமசிவம், வருவாய்த் துறை, பேரூராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.