/
திருநெல்வேலி, ஜூன் 10: மேலப்பாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மேலப்பாளையம், வீரமாணிக்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஜனவரி மாதம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தியபோது பைக்கில் வந்த 3 பேரில் ஒருவா் அங்கிருந்து தப்பினாா். மற்ற இருவரையும் விசாரித்ததில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த கணேஷ்குமாா், ரமேஷ் ஆகியோா் என்பதும் விற்பனைக்காக சுமாா் 1.1 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவா்களை போலீஸாா் கைது செய்து கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(19) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.






