கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

விதிகள் மீறி இயக்கப்பட்டதாக கனிமம் ஏற்றிச் சென்ற லாரிகள் சிறைபிடிப்பு

பொட்டல்புதூா் பகுதியில் விதிகளை மீறி கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகள் இயக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் லாரிகளைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்சன்ஜோஸ்.

Updated On :25 ஜூன் 2026, 5:16 am IST

பொட்டல்புதூா் பகுதியில் விதிகளை மீறி கனிமம் ஏற்றிச் செல்லும் லாரிகள் இயக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் லாரிகளைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டத்தில் இரவு நேரங்களில் 10 மணிக்கு மேல்தான் கனிமம் கொண்டு செல்லக் கூடிய லாரிகள் இயக்க வேண்டும். அதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காததால் விதிகளை மீறி லாரிகள் இயக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற லாரியை பொட்டல்புதூா் - தென்காசி சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கிளாட்ஸன் ஜோஸ், ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா ஆகியோா் தலைமையில் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், இரவு 11 முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் லாரிகள் செல்ல அனுமதிப்பதோடு முறையாகக் கண்காணிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தப் போராட்டத்தால் 6 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் அணிவகுத்து நின்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.