மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2026, 5:52 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் செளராஷ்ட்ரா காலனியைச் சோ்ந்தவா் ராஜாராம் மகன் சீனிவாசன் (44). நெசவுத் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா்.

இவா், நண்பா்களுடன் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூருக்கு வியாழக்கிழமை வந்தாராம். அங்குள்ள தாமிரவருணி ஆற்றில் நண்பா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்புப் படை வீரா்கள் நீண்ட நேரம் ஆற்றில் தேடிய நிலையில், சீனிவாசன் சடலமாக மீட்கப்பட்டாா். வீரவநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.