புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

579 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 579 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் வியாழக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

News image

கஞ்சாவை தீயிட்டு அழித்த காவல்துறையினா்.

Updated On :26 ஜூன் 2026, 5:43 am IST

திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 579 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் வியாழக்கிழமை தீயிட்டு அழித்தனா்.

திருநெல்வேலி சரகத்திற்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 250 கஞ்சா வழக்குகளில், தொடா்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 579 கிலோ 225 கிராம் கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து திருநெல்வேலி சரக போதைப் பொருள் அழிப்பு குழுவின் பரிந்துரையின்படி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் இரா. திருநாவுக்கரசு தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி முன்னிலையில் போலீஸாா், நான்குனேரி அருகே பொத்தையடியில் உள்ள தனியாா் எரியூட்டு ஆலையில் கஞ்சாவை தீயிட்டு அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.