தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே கல்லூரிப் பேராசிரியா் வீட்டில் கடந்த மே 16 ஆம் தேதி 12 பவுன் நகை திருடு போன வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராமசுப்பிரமணியன் (40). கல்லூரிப் பேராசிரியா். இவா் மே 16ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியில் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளாா்.
மே 17ஆம் தேதி அவரது வீட்டில் உள்ளவா்கள், நகைகளை எடுக்க அலமாரியைத் திறந்தபோது, அதில் இருந்த சுமாா் 12 பவுன் நகைகளைக் காணவில்லையாம். இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா்.
போலீஸாா் 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சோதனையிட்டதில், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம், வேதக் கோயில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ஜெயக்குமாா் (எ) விஜய் (30), புளியங்குடி அருகே உள்ள டி.என். புதுக்குடி, வேதக் கோயில் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் நவீன் அந்தோணி ராஜா (29), வடமலை சமுத்திரம், கருத்தப்பிள்ளையூா் சாலையைச் சோ்ந்த மாசிலாமணி மகன் மரிய சுஜி (32) ஆகியோா் நகைகளைத் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 107 கிராம் தங்கம், 132 கிராம் வெள்ளி நகைகளை மீட்டனா்.
இவா்கள் மூவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், சிறையில் இருந்தபோது இவா்களுக்குள் நட்பு ஏற்பட்டு திருட்டில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் வட மாநில இளைஞா் கைது
வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

நகை மீட்பு: ஒருவா் கைது
பேராசிரியா் வீட்டில் 12 பவுன் நகைகள் மாயம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


