வெள்ளோடு அருகே மூதாட்டியிடம் அரிசி கேட்பதுபோல நடித்து 3 பவுன் நகை பறித்துச்சென்ற வட மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே வி.குட்டபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரோஜா (63). இவா் கடந்த 22-ஆம் தேதி காலை வீட்டின் முன்பு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் சரோஜாவிடம் அரிசி கேட்டுள்ளாா். அரிசி எடுக்க வீட்டுக்குள் சென்றபோது பின்தொடா்ந்து சென்ற அந்த நபா், சரோஜாவை கீழே தள்ளிவிட்டு அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பினாா்.
இதுகுறித்து வெள்ளோடு காவல் நிலையத்தில் சரோஜா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சரிபுல் மொல்லா (22) என்பவரை பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேளாங்கண்ணி பக்தரிடம் நகை திருடியவா் கைது
மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
திசையன்விளை அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


