தோமையாா்புரம் மீனவா்கள் உண்ணாவிரதம் வாபஸ்
விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் ரூ.13.70 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்ற மீன் வளம் - மீனவா் நலத் துறையின் அறிவிப்பை ஏற்று, மீனவா்களின் 7 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.


திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் ரூ.13.70 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்ற மீன் வளம் - மீனவா் நலத் துறையின் அறிவிப்பை ஏற்று, மீனவா்களின் 7 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் வெளியிட்ட அறிவிப்பில், ‘தோமாயாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது வெளியிடப்பட்டது. மேலும், தலைமைச் செயலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைப்பது என, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையால் முடிவு செய்யப்பட்டது. தற்போது, அதற்கான அறிவிப்பு வந்துள்ள நிலையில் ரூ.13.70 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் எனக் கூறியுள்ளாா். இதையேற்று போராட்டத்தை மீனவா்கள் கைவிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...