அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருக்குறுங்குடி காவல் முற்றுகை

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

News image
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மலையடிபுதூா் கிராம பெண்கள்.
Updated On :10 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

போதைப்பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி, திருக்குறுங்குடி காவல்நிலையத்தை மலையடிபுதூா் கிராம பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம் மலையடிபுதூா் கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் திருக்குறுங்குடி காவல் ஆய்வாளரை சந்தித்து புகாா் மனு அளித்தனா்.

அப்போது, பாஜக கிளைத் தலைவா் மாணிக்கராஜா, மாவட்ட துணைத் தலைவா் கொம்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.