காவல் நிலையத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள புதிய இணையத் தொடர் காக்கி சர்க்கஸ்.
இந்த இணையத் தொடரில் நடிகர்கள் முனீஸ்காந்த் - சுபாஷ் செல்வம் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிறைக்குள் இருக்கும் சாமி உண்டியலில் உள்ள பணம் திருடு போகிறது. அந்தப் பணத்தை திருடியது யார்? என்பதை கண்டுபிடிக்கும் காவல் துறை விசாரணையை மையப்படுத்தி, இந்தத் தொடர் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் முனீஸ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கௌதமி நாயர், அம்ருதா, மருதுபாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அமீன் பாரிஃப் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.
காக்கி சர்க்கஸ் இணையத் தொடர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(ஏப். 10) ஆம் தேதி வெளியாகிறது.
தற்போது, போலீஸ் போலீஸ், தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் இணையத் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், காக்கி சர்க்கஸ் இணையத் தொடர் மக்கள் மனங்களை வெல்லுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Summary
Kaakee Circus is a new web series centered around a police station.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவு!

ஓடிடியில் வெளியான சுரபியின் புதிய இணையத் தொடர்!

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு! வைரல் புகைப்படங்கள்!

சந்தீப் கிஷனின் சூப்பர் சுப்பு இணையத் தொடர் நாளை வெளியீடு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0




